திராவிட வாசிப்பு – இனமான பேராசிரியர் க.அன்பழகன் சிறப்பிதழ் – ஜூலை 2021: Dravida Vaasippu – Inamaana Perasiriyar K. Anbalagan special edition – July 2021 (Tamil Edition)

0
13வணக்கம்.

இனமான பேராசிரியருக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டுவர வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் எண்ணம். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. பேராசியர் குறித்து எழுதவும், வாசிக்கவும் நிறைய இருக்கிறது. அவரைக்குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல இந்த ஜூலை 2021 மாத திராவிட வாசிப்பு சிறப்பிதழ் சிறிது பயன்பட்டாலும் மகிழ்ச்சி.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் இனமான பேராசிரியர் குறித்து வாசித்தபோது எத்தனை உண்மை என்று புரிந்தது.

கலைஞர் சொல்வார்..

“நாங்கள் உங்களுக்காகப் பேசுகிறோம்… பேராசிரியர் எங்களுக்காகப் பேசுகிறார்… அதன் அர்த்தம் என்னவென்றால்… நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எங்கள் உரையில் இருக்கும். நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பேராசிரியரின் உரையில் இருக்கும்”

– கலைஞர் கருணாநிதி

இன்றைய தமிழ்நாட்டு முதல்வரும், கழகத்தலைவருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இனமான பேராசிரியர் குறித்து சொன்னது..

பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய கார்ல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட தலைவர் கருணாநிதிக்கு உற்ற பெருந்துணையாக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், தி.மு.க-வின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணைநிற்கிறார்.

மு.க.ஸ்டாலின். (அன்பழகனின் 97-வது பிறந்தநாளில்)

கவிக்கோ அப்துல் ரகுமானின் இந்த கவிதை, பேராசிரியரின் இலட்சிய வாழ்வை மட்டுமல்ல, நூறாண்டு திராவிட இயக்க வரலாற்றையும் சொல்கிறது.

ஒரு புயற்பொழுதில்

கலைஞரும் நீயும்

இரு கரங்களாகக்

காத்திராவிட்டால்

திராவிட தீபம்

அணைந்து போயிருக்கும்!

– கவிக்கோ அப்துல் ரகுமான்

இனமான பேராசியர் யார் என்பதை அவரே சொல்கிறார். அவர் சொல்படி தான் கடைசி வரை வாழ்ந்தார் என்பதை விட பெருமை வேறென்ன இருக்க முடியும்?

முதலில்

நான் மனிதன்,

2-வது நான் அன்பழகன்,

3-வது நான் சுயமரியாதைக்காரன்,

3-வதுஅண்ணாவின் தம்பி,

5-வது கலைஞரின் தோழன்

இனமான பேராசிரியர் குறித்து பல்வேறு ஆளுமைகள் கூறிய கருத்துகள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது.

பேராசிரியரின் பேச்சுக்கள், பேராசிரியரின் எழுத்துகள், பேராசிரியர் குறித்து உடன்பிறப்புகளின் கட்டுரைகள் என இந்த இதழ் நிறைவாக வெளியாகிறது. இந்த இதழை வாசித்துவிட்டு, நீங்கள் பேராசிரியர் குறித்து மேலும் வாசிக்க அவரது புத்தகங்களை நாடினால், அதுவே இந்த இதழின் வெற்றியாக இருக்கும். இனமானத்தை தன் வாழ்நாளெல்லாம் தமிழர்களுக்கு ஊட்டிய பேராசிரியர் பெருந்தகையின் இலட்சிய வாழ்வை போற்றுவோம். அவரது இலட்சியங்களை நம் நெஞ்சில் ஏந்தி, திராவிடம் செழிக்க பாடுபடுவோம்.


ASIN : B09BFYBFBD
Brand :

Buy Now Price: ₹49.00
(as of Oct 21,2021 00:08:43 UTC – Details)
#தரவட #வசபப #இனமன #பரசரயர #கஅனபழகன #சறபபதழ #ஜல #Dravida #Vaasippu #Inamaana #Perasiriyar #Anbalagan #special #edition #July #Tamil #Edition